வடமாகாண ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு

டமாகாண ஆளுநரின் கன்னியுரையினை வடமாகாண சபை மூன்று உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது வடமாகாண ஆளுநரின் கன்னியுரை இடம்பெற்றது. இதனை, தழிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் உரையினைப் புறக்கணிக்கவுள்ளதாக வடாமகாணசபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :