மகிந்தவிற்கு எதிராக போராடாவிடின் சர்வாதிகார ஆட்சியில் அடிமைகளாக வாழவேண்டும் - ரணில்

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை மீறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக பொதுமக்களை வீதியில் இறக்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்திற்கு எதிரில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சத்தியாகிரகம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது போன்ற சாத்வீகப் போராட்டம் 40 வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர். ஜயவர்தன, விஜயானந்த, தஹாநாயக்க, தொண்டமான் ஆகிய தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதேபோன்ற போராட்டங்களை தொடர்ந்தும் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களின் உரிமை, ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை, ஊடக சுதந்திரம், பேச்சுரிமை போன்றவற்றை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி போராடாது போனால் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அடிமைகள் போல் வாழ வேண்டிய நிலைமை உருவாகும். நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, நாட்டின் சட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதை காணமுடிகிறது. பொலிஸார் அரசாங்கத்தின் கைபாவைகளாக மாறி விட்டனர்.

பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளை முற்றாக கீழடிப்பு செய்து விட்டு மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் நாட்டில் செயற்பட்டு வருகிறது. இலங்கைக்கு பொதுநலவாயத்தின் தலைமைத்துவ பதவி கிடைத்தாலும் அதன் கொள்கைகள் அமுல்படுத்தப்பட மாட்டாது. 

இந்த கொள்கைகளை அமுல்படுத்த புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக வீதியில் இறங்கி போராட வேண்டும். 

அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அடக்கு நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பேசுபவர்கள், எழுதுபவர்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்படுகின்றனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :