தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை உருவாக்கி குளிர்காயும் ஊடகம் குறித்து எச்சரிக்கை

யாழ்ப்பாணம் ரியாஸ்
முஸ்லிம்களின் நலன் குறித்து குரல் கொடுப்பதாக காட்டிக் கொள்ளும் அனைத்து ஊடகங்களும் உண்மையில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்றனவா, அல்லது முஸ்லிம்களின் பிரச்சினையை முதலீடாக வைத்து தமது ஊடகத்தை சந்தைப் படுத்துவதில் மட்டும் முனைப்பாக உள்ளனவா என்கின்ற சந்தேகம், குறித்த ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி இணைய ஊடகம் தொடர்பில் கடந்த சில காலங்களாகவே பல்வேறு தரப்புகளிலும் எழுப்பப் பட்டே வந்துள்ளது.

குறித்த ஊடகம் இலங்கையில் தடை செய்யப் பட்டுள்ள பொழுதும் கூட அதன் வாசகனாக தொடர்ந்தும் இருந்துவரும் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் அடிப்படையில், முஸ்லிம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களும் உண்மையை உணர்ந்து, முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஒரு சிலரால் பிழையாக வழி நடத்தப் படுகின்றார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை எழுதிகின்றேன்.

குறித்த ஊடகம் கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் தாக்கப் பட்ட பொழுது அதிரடித் தலைப்புக்களுடன் அடிக்கடி Breaking News போட்டதன் மூலம் புகழ் பெற்ற ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி ஊடகம் ஆகும். இலங்கையில் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளபப்ட்ட தாக்குதல்கள் குறித்து மேற்படி ஊடகம் வெளியிட்ட தொடரான செய்திகளே மேற்படி ஊடகத்தின் வளர்ச்சிக்கான முதலீடுகளாக ஆக்கப் பட்டிருந்தன.

அண்மைக் காலங்களில் பள்ளிவாசல்கள் தாக்கப் படாமை குறித்து மேற்படி ஊடகம் மனச்சோர்வடைந்து, அதன் விளைவாய் முக்கியத்துவமில்லாத செய்திகளை, பார்க்கப் பயங்கரமான தலைப்புகளைத் தீட்டி வெளியிட்டு வாசகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த முனைவதனை அவதானிக்க முடிகின்றது.

மேற்படி ஊடகம் இன நல்லுறவைக் குலைக்கும் விதமாக அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் கடந்த நான்காம் திகதி கனடாவில் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்களை, குறித்த விடியோவை வெளியிட்டு, மிக மோசமாக தப்பர்த்தம் பண்ணி தலைப்புடன் செய்தி வெளியிட்டு இருந்தது.

வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நட்புறவு ஏற்படுவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிமான அஸ்மின் அய்யூப் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் வட மாகாண சபை உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டுள்ள நிலையில், அதே பிரதேசத்தின் பெயரை அடையாள படுத்தி நிற்கும் மேற்படி ஊடகம், தமிழ் முஸ்லிம் நல்லுறவிற்கு குந்தகம் ஏற்படும் படியாக தனது செய்தியை வெளியிட்டுள்ளது.

மேற்படி ஊடகத்தின் செய்தியாய் மட்டும் நம்பி, நான் பதிந்த கருத்தை பிரசுரித்துள்ள மேற்படி இணைய ஊடகம், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் உரையை நான் செவி மடுத்த பின்னர், வருத்தம் தெரிவித்து பதிந்த கருத்தை பிரசுரிக்க மறுத்துவிட்டது.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் உரையை முழுமையாகக் கேட்ட பொழுது, குரித்த ஊடகத்தின் செய்தியை வாசித்து நான் கொண்டிருந்த கருத்துக் குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு உள்ளானேன்.

http://www.youtube.com/watch?v=O2NlJvrTcD4 என்கின்ற இணைப்பில் காணப்படும் மேற்படி விடியோவில், 7.00 ஆவது நிமிடமளவில் முஸ்லிம்கள் தொடர்பான கேள்வி எழுப்பப் படுகின்றது. அங்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் முஸ்லிம்களுக்கு மிகவுமே ஆதரவான நிலைப்பாட்டினையே வெளிப்படுத்துகின்றார். அவரது நல்லெண்ணத்திற்கு முஸ்லிம்கள் அனைவரும் நன்ரி சொல்லக் கடமைப் பட்டுள்ளனர்.


பல்வேறு தீய நோக்கங்களுக்காக முஸ்லிம்களை பலிக்கடா ஆக்கி, இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை உருவாவதை ஆவலோடு எதிர்பாத்து காத்திருக்கும் பிணந்தின்னிக் கழுகுக் குணம் கொண்ட இணைய ஊடகம் குறித்து முஸ்லிம்கள் எச்சரிக்ககயுடன் இருப்பதுடன், குறித்த ஊடகத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :