
-எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெள்ளி விழா நிகழ்வினை முன்னிட்டும் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டும் வைத்தியசாலையின் நீரிழிவு பிரிவினால் தொற்றா நோயான நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வும், விளக்கமும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் ஆசிரியர்களுக்கு பாடசாலை கூட்ட மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், பொதுசுகாதார வைத்தியர் டாக்டர் ஏ.எல்.பாறூக் ஆகியோரின் வழி நடத்தலில் பாடசாலையின் அதிபர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நீரிழிவு நிலைய பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் எம்.சீ.எம்.சீ.றிழா, சுகாதார போதனா பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி சத்தியா ஆகியோர் நீரிழிவு நோய் பற்றிய விரிவுரைகளை நடத்தினர்.
இந்நிகழ்வில் தாதிய உத்தியோகத்தர்களான திருமதி சர்மிலா, நிஸார் மற்றும் பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



0 comments :
Post a Comment