பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கை விலகிக்கொள்ள வேண்டும் - ஜே.வி.பி

பொ
துநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கை விலகிக்கொள்ள வேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது. கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதத்தின் கீழ் இலங்கை பல ஆண்டுகளாக இருந்தது. இந்தநிலையில் சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்த நிலை தொடர்கிறது. பொதுநலவாய நாடுகளின் தலைமையை இன்னமும் பிரித்தானியாவே கொண்டிருக்கிறது. 

தவிசாளர் நிலையை அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த பதவியே அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் கிடைக்கும். 

இந்தநிலையில் பொதுநலவாய அமைப்பு என்பது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஒரு அங்கமேயாகும். எனவே அந்த அமைப்பில் இருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்று விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :