பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பு உள்ளிட்ட ஊடகப் பணிகளில் ஈடுபடுவதற்காக வருகை தந்துள்ள பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.கொலைக்களம் ஆவணப்படத்தின் இயக்குனரும், சனல் 4இன் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான கெலம் மக்ரே தலைமையிலான சனல் 4 தொலைக்காட்சி குழுவினர் இன்று திங்கட்கிழமை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடு இலங்கை வந்தனர்.
அவர்கள் வெளியேறும் வழியிலும், விமான நிலையத்திற்கு வெளியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறும்- பாதாகைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கெலம் மக்ரேவும், சனல்4 தொலைக்காட்சியும் தொடர்ந்து செயற்படுவதாவும், புலிகள் இழைத்த கொடுமைகள் பற்றி பேசாமல் தொடர்ந்தும் இலங்கை மீது வீண்பழி போடுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.
அத்தோடு, இலங்கைக்கு எதிராக செயற்படும் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு பொதுநலவாய மாநாட்டுக்கு வருவதற்கான அனுமதியை வழங்கியது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment