முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இல்லை - சஜித் பிரேமதாச

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இல்லையெனவும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க தயாராகவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தென்மாகாண சபைக்கான ஐ.தே.க. வின் முதலமைச்சர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கும் படி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும், தேசிய பிக்கு முன்னணியும் கட்சியின் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சஜித் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இல்லையென தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கவும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதையே பொதுமக்கள் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :