அரசாங்க தரப்பில் போட்டியிட்ட சிராஸ் என்பவருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் - துண்டுப்பிரசுரம் இணைப்பு

ரசாங்க தரப்பில் போட்டியிட்ட எம்.சிராஸ் என்பவருக்கு எதிராக, “தமிழர் மறுமலர்ச்சி இயக்கம்” எனும் பெயரில், யாழில் துண்டுப்பிரசுரம்-
வட மாகாண சபை தேர்தலில் அரசாங்க தரப்பில் போட்டியிட்ட எம்.சிராஸ் என்பவருக்கு எதிராக தமிழர் மறுமலர்ச்சி இயக்கம் எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று தற்போது யாழ் மாவட்டத்தில் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளது.

இத்துண்டுப்பிரசுரத்தில் சிராஸூக்கு ஒர் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், வடமாகாண மக்களின் கலாசார வாழ்வை அவமானப்படுத்தும் விதமாக அவர் செயற்படுவதை வன்மையாக எதிர்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது,

நடந்து முடிந்த போரில் மட்டுமே நாம் தோற்றோம். உணர்வு ரீதியாக நாம் தோற்கவில்லை. தழிழ் மொழி பேசும் மக்களாகிய நாங்கள் இன்னும் எமது உணர்வுகளை தொலைத்து விடவில்லை.

அனைத்தையும் இழந்து நிற்கும் நாம் உங்களைப் போன்றவர் இங்க வந்து எம் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதியோம்.

உரிமை போராட்டத்தில் நாம் அனைத்தையும் இழந்தாலும் அபிலாசைகளை இழக்கவில்லை. எமது மக்களை இரும்பு வியாபாரம் எனும் பெயரில் கொள்ளையிட்டு சம்பாதித்த பணத்தில், விலை கொடுத்து வாங்கிவிடலாம் என மட்டும் எண்ணி விட வேண்டாம்.

உங்களை பொன்றவர்கள் ஏலவே இங்க படம் போட்டு தோற்றதே வரலாறு. எமது சொத்துக்களை சூறையாடி இரும்பு வியாபாரம் எனும் பெயரில் கோடிஸ்வரன் ஆகியவர் நீங்கள்.

எம்மை விபசார அரசியலுக்கு அழைக்க இடமளிக்க, இனியும் அனுமதிக்க மாட்டோம். மேலும் அச்சறுத்தல் விடுப்பதும், எமது பெண்களின் மீது தங்களின் அருவருடிகள் செய்யும் சேட்டைகள் அவதானிக்கிறோம்.

இவ்வாறான அடாவடிகள் எம் பிரதேசத்தில் இனி அனுமதியோம். உங்களை திருத்திக் கொள்ள ஒரு சந்hர்ப்பத்தை வழங்குகிறோம். தவறவிட்டால் இனியொரு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. நேர்மையான அரசியலை செய்யுங்கள். அதற்கு நாங்கள் ஆதரவு தருவோம்.

இதனை மீறி செயற்பட்டால் கடும் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :