மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
5 டெஸ்ட் கொண்ட ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணி மோசமாக விளையாடி தோற்று தொடரை இழந்தது.
முதல் டெஸ்டில்14 ஓட்டங்களிலும், 2–வது டெஸ்டில் 347 ஓட்டங்களிலும், 4–வது டெஸ்டில்74 ஓட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3–வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் இங்கிலாந்து3–0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 21–ந் திகதி தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து இங்கிலாந்து – அவுஸ்திரேலியா மோதும் இரண்டு 20 ஓவர் ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டி நடக்கிறது. செப்டம்பர் 6–ந் திகதி முதல் 16–ந் திகதி வரை ஒருநாள் தொடர் நடக்கிறது.
ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
புதுமுக வீரர் பவாத் அகமது அணியில் இடம்பெற்றுள்ளார். சுழற்பந்து வீரரான இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். 2010–ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இவர் அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் புகுந்தார். உள்ளூர் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் அவுஸ்திரேலிய தேர்வு குழு வாய்ப்பு வழங்கியுள்ளது.
வேகப்பந்து வீரர் ஜோஷ் ஹாசல்வுட் 3 ஆண்டுக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளார். சாம்பியன் டிராபி போட்டியில் விளையாடிய மிச்சேல் மார்ஷ், டோகர்ட்டி ஆகியோர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி விவரம்:–
கிளார்க் (கேப்டன்), பெய்லி, வார்னர், வாட்சன், ஸ்டீவன் சுமித், மேத்யூவாடே, ஷான் மார்ஷ்,வோகஸ், பவ்ல்னெர், அரோன்பிஞ்ச், ஹாசல்வுட், ஹியூகஸ், மைக்கேல் ஜான்சன்,மேகஸ்வெல், மெக்காய், ஸ்டார்க், நாதன் கோல்டர், பவாத் அகமது.

0 comments :
Post a Comment