ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு இடையே மோதல் உக்கிரம் - கபே இயக்கம்

குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஆதரவு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் தேர்தல் மோதல்களின் மற்றுமொரு சம்பவம் நேற்று நிக்கவெரட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.

நிக்கவெரட்டிய ஜயந்தி மாவத்தையில் உள்ள ஐமசுமு.யின் தயாசிறி, சாலிந்த, ஜயரத்ன ஹேரத் பிரிவு ஆதரவாளர் வன்னிநாயக்க வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக கபே இயக்கம் தெரிவித்துள்ளது. 

தனது வீட்டுக்கு வந்தவர்கள் தன்னை வெளியில் வருமாறு அழைத்து பின் வீட்டின் யன்னல்கள், கதவுகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடாத்தியதாகவும் அரசாங்க தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தாலும் அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளதெனவும் பாதிக்கப்பட்ட வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். 

குருநாகல் மாவட்டத்தில் ஐமசுமு சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர் குழுக்களுக்கு இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக கபே இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பா.உ இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோர் ஒரு குழுவாகவும் தயாசிறி ஜயசேகர, பியூமால் ஹேரத், மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் ஒரு பிரிவாகவும் செயற்படுகின்றனர். ஆகையால் குருநாகல் மாவட்டம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என கபே இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -