17 மொழிகளில் ‘ஐ’ திரைப்படத்தை வெளியிட திட்டம்.

கொலிவுட்டின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருப்பது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்,எமிஜாக்சன் நடித்து வரும் ’ஐ’ படத்தைப் பற்றியதுதான்.

’ஐ’ படத்தின் ஷூட்டிங் 75சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கொலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

அந்தவகையில் ‘ஐ’ திரைப்படத்தினை 17 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்குமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’எந்திரன்’ படத்தினை 9மொழிகளில் வெளியிட்டார்கள்.

ஷங்கர் இயக்கிவரும் ’ஐ’ படத்திற்கு, நீண்ட இடைவெளிக்குப் பின்பு இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

அதேபோல் ‘ஆஸ்கர்’ வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படம் தாமதமாவதற்கு காரணம் என்னவென்று விசாரித்தபோது, விக்ரமிற்கு பிசிகல் சேஞ்ச், மோல்டிங், ஸ்கேனிங், செயற்கை உறுப்புக்கான பொருட்களை தயார் செய்தல் என கிட்டத்தட்ட இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து ஒருவருடம் ஆகிவிட்டதாம்.

’ஐ’ டீம் தற்போது சென்னை மருத்துவமனையில், கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :