அனைத்து தமிழ் மக்களும் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று யாழ். மானிப்பாய் சாவற்காடு பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. 

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை மிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திப் பேசியதுடன், வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கருத்தரங்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கௌரகாந்தனும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :