பத்தனை - தங்காப்பு (கிரெக்லி) தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 24 வயதுடைய ரட்ணகுமார் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாய்பேச முடியாத இவர் வீதியில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் வர பயந்து ஆற்றை கடந்து ஓட முயற்சித்துள்ளார்.
இதன்போதே ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் கொட்டக்கலை வைத்தியசாலையின் பிரத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment