இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களின் படகுகளை செய்மதி மூலம் படம் பிடிக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை குறித்து இந்திய புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரையுள்ள பாக் ஜலசந்தி கடலில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள் மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடைப்பட்ட ஆழம் குறைந்த கச்சதீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் இறால் மீன்பிடிக்கும் ஆசையில் சென்று வருகின்றனர்.
இதனால் எல்லை தாண்டி வருவதால் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு தமிழக மீனவர்கள் உள்ளாகி வருகின்றனர். நாகப்பட்டினத்திலிருந்து 2 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க சென்ற 139 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,தமிழக மீனவர்கள் பிரச்னையின்றி மீன் பிடிக்கவும் தேவையான நிலையை உருவாக்க வேண்டும் என்றால் மத்திய அரசால் வழங்கப்பட்ட கச்சத்தீவை இலங்கையிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை கடற்படைக்கு அஞ்சி இக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல தயங்கும் மீனவர்கள் மங்களூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை தேடி செல்ல துவங்கியுள்ளனர்.
இதனால் கடலுக்கு செல்லும் படகுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லும் படகுகளை ரகசியமாக படமெடுக்கும் நடவடிக்கையில் தற்போது இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் படகுகளை செய்மதிகள் மூலம் படமெடுத்து சர்வே செய்யும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை கடல் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழைவது,இலங்கை கரை ஓரத்தில் மீன்பிடிப்பது போன்ற புகார்களுக்கு ஆதாரம் திரட்டும் வகையில் இலங்கை கடற்படையினர் இச்செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய புலனாய்வு துறையினரும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

0 comments :
Post a Comment