அமைச்சுப் பதவியையும் அரசின் வளங்களையும் துறந்து விடுவேன்-அமைச்சர் பசீர் சேகுதாவூத்

டைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாகவிருந்தால் அமைச்சுப் பதவியையும் அரசின் வளங்களையும் துறந்து விடுவேன்

என்று அமைச்சர் பசீர் சேகுதாவூத் உள்ளுர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

கட்சிக்குள்ளிருந்து கொண்டு ஒருவர் கட்சிக்கெதிராக எவ்வாறு பிரசாரத்தில் ஈடுபடடுவது மனச் சாட்சிக்கு விரோதமோ அதேபோன்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு எவ்வாறு அரசுக்குகெதிராக பிரசாரததில் ஈடுபட முடியுமென்றும் அவர் வினவினார்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு தனித்துப் போட்டியிடக் கூடாது என அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் வலியுறுத்தினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு தனித்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரப் பணியில் ஈடுபட என்னால் முடியாது.

அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு தனித்துப் போட்டியிடக் கூடாது என்பதே என் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரதி அமைச்சர் பதவியைத் துறந்து விட்டே கட்சிக்காக தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டேன் என்றும் அவர் ஞாபகப்படுத்தினார்.

இம்முறை தேர்தலில் இது தொடர்பில் எத்தகைய முடிவையும் தாம் மேற்கொள்ளவில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :