(எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் 'வாழ்வின் ஒளி' செயற்றிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் விழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(6) மாலை 3.30 மணிக்கு நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க ஆகியோர்களுடன்; மாகாணசபை. மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளும் பயனாளிகளும் கலந்து கொள்ளவுள்ளவுள்ளனர்.
இவ்வாழ்வாதார உதவி வழங்கும் வைபவத்தின் போது நிந்தவூர் மற்றும் அட்டப்பளப் பிரதேசங்களைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கு குழாய்நீர் இணைப்புக்களும், வறுமைக் கோட்டின் கீழுள்ள 10 குடும்பத்தலைவிகளுக்கு அவர்களின் தொழில் முயற்சிகளுக்காக 10 தையல் இயந்திரங்களும் அத்துடன் 10 விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் உபகரணங்களும்; மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 மண்வெட்டிகளும் வழங்கப்படவுள்ளது. அத்துடன், இவ்விழாவுடன் இணைந்ததாக இப்பதார் பைவமும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் மேலும் குறிப்பிட்டனர்.

0 comments :
Post a Comment