பள்ளிவாயல் அருகில் உள்ள அரச மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பம்.


கிராண்ட்பாஸ் பழைய பள்ளிவாயல் அருகில் உள்ள அரச மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியது.

இம் மரத்தை அகற்றும் பணிகள் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நடைபெற்று வருவதாக எமது நிருபர் தெரிவித்தார்.

கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பாக நேற்று புத்தசாசன அமைச்சில் இடம்பெற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே இந்த மரம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முஸ்லிம் மக்கள் முன்னர் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த வழிபாட்டுத்தலத்திற்கு மீண்டும் செல்வார்கள், தற்பொழுது அந்த இடத்தில் வழிபாடுகளுக்கு உட்படாத அரச மரம் ஒன்று உள்ளது, அதனை அங்கிருந்து அகற்றி முஸ்லிம் மக்கள் வழிபடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் பாட்டலீ சம்பிக்க ரணவக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :