என்னை பதவி விலகுமாறு கூற நீ யார் பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் றிசாத் பாய்ச்சல்

பௌத்தசாசன அமைச்சில் கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் குறித்து முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள் என பல தரப்பினர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது முஸ்லிம் அமைச்சர்கள், கிரண்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலை பொலிஸார் வேடிக்கை பார்த்ததாக பொலிஸ்மா அதிபர் இளங்ககோனை நோக்கி குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பொலிஸ் மா அதிபரை நோக்கி, முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அடாவடி, பள்ளிவாசல் மீதான் தாக்குதல் எல்லாவற்றையும் பொலிஸார் வேடிக்கை பார்த்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பதிலளித்துள்ள பொலிஸ் மா அதிபர், என்னை பதி விலகுமாறுகூற நீங்கள் யார்..? என பதில் கேள்வியெழுப்பியுள்ளதுடன், அமைச்சரே நீங்கள்தான் பதவி விலக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சீற்றமடைந்துள்ள அமைச்சர் றிசாத், பொலிஸ் மா அதிபரை நோக்கி, என்னை பதவி விலகுமாறு கூற நீ யார் என் பதிலுக்கு கேட்டுள்ளதுடன், முஸ்லிம்களின் பிரதிநிதியாகவே நான் இங்கு வீற்றிருக்கிறேன் என் கூறியுள்ளார். 

இவ்வாறு வாதப்பிரதிவாதங்கள் தொடரவே ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாக அறியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :