விஜய் கூல் ஆனவர் என்றும், அஜீத் உண்மையானவர் என்றும் பிரபல புகைப்படக்காரர் சிற்றரசு.

விஜய் கூல் ஆனவர் என்றும், அஜீத் உண்மையானவர் என்றும் கோலிவுட்டின் பிரபல புகைப்படக்காரர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் பிரபலமான புகைப்படக்காரர்களில் ஒருவர் சிற்றரசு. அவர் அஜீத், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் முதல் இளம் தலைமுறை ஹீரோக்கள் வரை ஏராளமானோருடன் பணியாற்றியுள்ளார்.

அவர் அஜீத் மற்றும் விஜய் குறித்து முன்னணி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சில விவரங்களை உங்களுக்கு அளிக்கிறோம்.

விஜய்க்கு அசின் 
இளையதளபதி விஜய்க்கு அசின் தான் சிறந்த ஜோடி என்று புகைப்படக்காரர் என்ற முறையில் தனக்கு தோன்றுகிறது என்றார் சிற்றரசு.

அஜீத்துக்கு நயன் 
அஜீத் குமாருக்கு ஏற்ற ஜோடி என்றால் அது நயன்தாரா தான் என்று சிற்றரசு தெரிவித்துள்ளார்.

தளபதிக்கு கேஷுவல் 
விஜய்க்கு கேஷுவல் டிரஸ் நன்றாக இருக்குமாம்.

அஜீத்துக்கு வேட்டி, சட்டை 
அஜீத் குமார் வேட்டி, சட்டையில் அம்சமாக இருப்பார் என்று கூறியுள்ளார் சிற்றரசு.

விஜய் கூல் 
விஜய்யிடம் சிற்றரசுக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அவர் தன்னுடன் பணிபுரிபவர்களை ரிலாக்சாக ஃபீல் பண்ண வைப்பது தான்.

அஜீத் உண்மையானவர் 
அஜீத் குமார் உண்மையானவர் என்றும் தன்னுடன் பணிபுரிபவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார் என்றும் சிற்றரசு தெரிவித்துள்ளார். ஒருவரிடம் அஜீத் நன்றாக பழகிவிட்டால் அவருக்கு தேவையான நேரத்தில் உதவி செய்வார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் 
சிற்றரசு அஜீத்தின் ஆரம்பம் படத்தில் பணிபுரிந்துள்ளார். மேலும் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் பணிபுரிகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :