வடக்கு மாகாண சபை தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் முதலாவது வேட்பு மனு நேற்று (25) பகல் 1.05 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தொழில் கட்சியினால் இவ்வேட்பு மனு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை தொழில் கட்சி முதன்மை வேட்பாளராக P.G.தயானந்தா தெரிவு செய்யப்பட்டு அக்கட்சியின் செயலாளர் P.D.கசுனி லியனகேயால் ஒப்பமிடப்பட்டே அவ்வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தலின் போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் 526வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதாகவும் 4 லட்சத்து26 ஆயிரத்து 703 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் யாழ். அரச அதிபர் தெரிவித்தார்.
அதேவேளை நேற்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி மதியம் 12 மணிவரை அலுவலக நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ள தொடங்கியதை அடுத்து யாழ். மாவட்ட செயலகம் முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment