சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் மாணவி சமூக விஞ்ஞான வினாடிப் போட்டியில் முதலிடம்.

ஏ.எம். தாஹாநழீம்.
ம்மாந்துறை முஸ்லிம் மகளிர் மாணவி சமூக விஞ்ஞான வினாடிப் போட்டியில் முதலிடம் வென்றார்.

பாடசாலை மாணவர்களின் சமூகக்கல்வி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவருகின்றது அப்போட்டிகளில் திறமை காட்டும் மாணவர்களை வலய, மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் கடந்த 22.06.2013 ஆந் திகதியன்று மருதமுனை அல்-மனார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட தரம் -8 ற்கான போட்டிப் பிரிவில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டார் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எம்.எஸ். பாத்திமா இஸ்றா என்பவர்.

மேற்படி மாணவி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு பாடசாலை அதிபர் ரீ.எம். தௌபீக் மற்றும் அப்பாட ஆசிரியையான எம்.ரீ. றணீஸா ஆகியோரின் வழிகாட்டலின் ஊடாக இந்தப் பெருமையை பாடசாலைக்குத் தேடித்தந்துள்ளார்.

இம்மாணவி இது போன்ற பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்களிப்புச் செலுத்தும் ஒரு மாணவியாகும்.

இவரை எமது பாடசாலைச் சமூகமும், மற்றும் பொது நலன் விரும்புகளை வெகுவாக பாராட்டுகிறார்கள்.

தகவல். ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :