முகமது எல் பராடி எகிப்து காபந்து அரசின் பிரதமராகிறார்

கிப்தின் அதிபராக இருந்த மொர்சி கொண்டுவந்த சீர்சிருத்த கொள்கைகளுக்கு எதிராக தீவிர போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவரை, ராணுவம் பதவியிலிருந்து நீக்கி தடுப்பு காவலில் வைத்துள்ளது.

உடனே, நீதிபதி அட்லி மகுமூத் மன்சூரை இடைக்கால அதிபராக ராணுவம் நியமித்தது. இந்நிலையில் காபந்து அரசின் பிரதமராக எதிர் கட்சித்தலைவரான முகமது எல் பராடியின் பெயரை மொர்சிக்கு எதிரான கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

இதனையடுத்து அவர் இடைக்கால அதிபர் அட்லி மகுமூத் மன்சூரை சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவர் எகிப்தின் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர மற்றும் இடது சாரிக்கூட்டணி கட்சிகளை வழிநடத்தி செல்லும் முகமது எல் பராடி 71, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவரது நியமனத்திற்கு எதிராக லிபரல் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் இவர் பிரதமாராக வருவரா என்று பலத்த சந்தேகமும் காணப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :