ஆனமடு பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

னமடுவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அநுக்ஷ பிரியதர்ஷன எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

புத்தளம் பதில் நீதவான் மொஹமட் இக்பால் முன்னிலையில் சந்தேகநபர் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி வைத்தியசாலை ஊழியர் ஒருவரை தாக்கினார் என்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் இவர் நேற்று மாலை பொலிஸில் சரணடைந்த பின் கைது செய்யப்பட்டார்.

பல்லம வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது பல்லம நகரத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதாக பிரதேச சபை உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினரின் சகோதரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :