அநுராதபுரம் சாம விகாரையிலுள்ள பத்தினி ஆலயத்தில் பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட பத்தினி மற்றும் கம்பலி உருவச் சிலைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது சந்தேகநபர்கள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து உருவச் சிலைகள் இரண்டும் மாத்தளை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று (07) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 comments :
Post a Comment