நாடாளுமன்றத்தில் ம.ம.முவுடன் இணைந்து செயற்பட முடிவு: பிரபா

நாடாளுமன்றத்தில் முக்கியமான விடயங்களில் மலையக மக்கள் முன்னணியும் ஜனநாயக மக்கள் காங்கிரஸும் இணைந்து செயல்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் அரசியல் துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய வீ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் அடங்கிய அரசியல் குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். 

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவினருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையானது திருப்தியளிக்கின்றது. இரு முன்னணிகளும் நாடாளுமன்றத்தில் முக்கியமான விடயங்களில் இணைந்து செயல்படுவதெனவும் முடிவு காணப்பட்டது என்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 இந்தபேச்சுவார்த்தையின் போது இன்றைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டது. 

மேலும் 13 ஆவது திருத்த சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களின் போது அதனை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கும் தீர்மாணிக்கப்பட்டது. 

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமாக பெரியசாமி சந்திரசேகரனின் கொள்கையின்படி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இன்றும் அதே பாதையில் மலையக மக்கள் முன்னணி பயனித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

 மலையக மக்கள் மத்தியில் கொள்கை ரீதியாக மலைய மக்கள் முன்னணி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

அதே நேரம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வரும் பொழுது மலைய மக்களுக்குமான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் வலியுறுத்தினார். 

இதனையே அண்மைக்காலமாக நானும் தெரிவித்து வந்தேன். எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் பொது விடயங்களில் இணைந்து செயல்படுவதனால் ஒரு பலமிக்க சக்தியாக திகழ முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

அதே போல் எதிர்வரும் மத்தியமாகாண வட மாகாணசபை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. நுவரெலியா, கண்டி, மாத்தளை, வவுனியா போன்ற மாவட்டங்களில் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடாமல் தனித்துவமாக போட்டியிடுவது சம்பந்தமாகவும் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மேலும் ஏனைய சிறுபான்மை கட்சிகளையும் கூட்டணிக்குள் இணைத்துக் கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :