(நுஸ்கி முக்தார் )
உலக வாழ் பௌத்தர்களின் புனித தளமாக கருதப்படும் புத்த கயாவிலுள்ள மஹா போதி விகாரை மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
விகாரைக்கும் அதன் பகுதிகளுக்கும் மேற்கொள்ளப்பட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை இலங்கை முஸ்லிம்கள் கண்டிப்பதோடு, இவ்வாரான உணர்வற்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களையும் கண்டிக்கிறோம். விகாரையின் புனித பகுதிகளுக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்பதால் திருப்தி அடைவதோடு, கயப்பட்டவர்களுக்கு விரைவான மீட்பு வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதனை சகித்துக்கொள்ள முடியாது. அதே போன்று மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் ஒரு கொடிய குற்றமாகும். இதனை எந்த மனிதராலும் அங்கீகரிக்க முடியாது.
பௌத்தர்கள் புனிதமாக கருதம் இவ்விகரைக்கு தாக்குதல் நடத்தியவர்களை இனங்கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக பிராந்திய அரசுகளிடத்தில் கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனின் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற் கண்டவாரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment