அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கீழ் இயங்கும் மடவளை வை.எம்;.எம்.ஏ.
அஹதிய்யா பாடசாலையின் 2013 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று
(30) ஞாயிற்றுக்கிழமை மடவளை மதீனா தேசிய பாடசாலையின் அஷ்ரப் கேட்போர்
கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கண்டி, மாத்தளை, குருநாகல்
மாவட்டங்களின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். றிஸ்மியின் வழி
நடாத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை
வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத்தலைவர் கே.என். டீன் அவர்களும், கௌரவ அதிதிகளாக அல்- ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புர்ஹான், பேரவையின் முன்னாள் தலைவர் அல்-ஹாஜ் சலீம்டீன் மற்றும் தும்பற பள்ளிவாயல்களின் சம்மேளனத்தலைவர்
அல்-ஹாஜ் இஸ்ஹாக் தலைமையகத்தின் முன்னாள் தலைவர் எம்.எஸ். றஹீம், உபதலைவர்
எம்.ரீ. தாசீம் ஆகியோருடன் மடவளை வை.எம்.எம்.ஏ, வை.டப்ளியு.எம்.ஏ.
அங்கத்தர்கள் அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள்,
பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும், மாணவர்களுக்கு பரிசில்களும்,
சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment