வடமாகாண சபை தேர்தலில் ஹக்கீம், ரிசாத் கட்சிகள் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற வடக்கு ஜம்இய்யத்துல் உலமா சபைகளின் அறிக்கை சுய சிந்தனையுடன் எழுதப்பட்டதாக தெரியவில்லை என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உலமா சபைகளின் மேற்படி அறிக்கை சம்பந்தமாக கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த அரசாங்கத்தின் தலைமையில் முஸ்லிம்களின் 17 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்ட போதும் ஹலாலை முற்றாக தடைசெய்த போதும் அவற்றுக்கெதிராகவும், இத்தகைய அநியாயங்களுக்கு அரசுடன் ஒத்துழைக்கும், ரிசாத், ஹக்கீம் கட்சிகளை பகிரங்கமாக கண்டிக்கவும் முன்வராத வடக்கு ஜம்இய்யத்துல் உலமா சபைகள் வடக்குத்தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட சொல்வது கொஞ்சம் கூட சமூகம் பற்றிய அறிவின்மையும், அக்கறையின்மையுமாகும்.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநியாயங்கள் அரச உதவியின்றியே நடைபெறுகிறது என வடக்கு உலமா சபைகளால் இறைவன் மீது சத்தியமிட்டு கூற முடியுமா என நாம் கேட்கிறோம்.
அரசு எனும் போது அதில் ரிசாதும் ஹக்கீமும் ஓர் அங்கம் என்பதை மறுக்க முடியுமா?
புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சுயமரியாதையுடன் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்பதை புலிகள் காலத்திலேயே தைரியமாக எமது கட்சி பேசி வந்துள்ளது.
புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சுயமரியாதையுடன் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்பதை புலிகள் காலத்திலேயே தைரியமாக எமது கட்சி பேசி வந்துள்ளது.
யுத்தம் முடிவுற்ற பின்னர் கூட முஸ்லிம்கள் சுய மரியாதையுடன் மீள் குடியேற அரச தரப்பு விடவில்லை என வடக்கு முஸ்லிம்களே தெரிவித்து வருகிறார்கள்.
அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் அரசு எங்களை கைவிட்டு விட்டது என பகிரங்கமாக அறிவித்திருந்தது உலமா சபைகளுக்கு தெரியாதா என்று கேட்கிறோம்.
அதே போல் முஸ்லிம்கள் மீள் குடியேறுவதை இராணுவமும், அரசாங்க அதிபரும் தடுப்பதாகவும் முஸ்லிம் மக்களே முறையிட்டுள்ளார்கள்.
முசலி பிரதேசத்தில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நடைபெறுவதே அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் வடக்கு முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்காத போது அரசுடன் இணைந்து பெறப்படும் மாகாண சபை உறுப்பினர்களால் எதனைத்தான் கிழிக்க முடியும்?
இவ்வாறு மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் வடக்கு முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்காத போது அரசுடன் இணைந்து பெறப்படும் மாகாண சபை உறுப்பினர்களால் எதனைத்தான் கிழிக்க முடியும்?
இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் தன்மானம் இழந்து நிர்வாணமாய் நிற்கும் நிலையில் ஹக்கீம், ரிசாத் கட்சிகள் மட்டுமல்ல தன்மானமுள்ள எந்தவொரு முஸ்லிமும் அரசுடன் இணைந்து கேட்கமாட்டான்.
அதே போல் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் மேற்படி கட்சிகள் தனித்து போட்டியிடுவதும் முஸ்லிம்களின் வாக்குகளை திருட்டுத்தனமாக பெற்று அரசுக்கு பின்கதவால் கொடுக்கும் துரோகமாகும். இதனை கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் கண்டுள்ளோம்.
வடக்கில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவத போல் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என சொல்வது அரசியல் அறிவின்மையாகும். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிடவில்லை. மாறாக அரசுக்கு எதிரான தமிழ் கட்சிகளே ஒன்றிணைந்து பொட்டியிடுகின்றன.

டக்ளசின் கட்சியோ, பிள்ளையானின் கட்சியோ தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவில்லை. இவர்களின் கட்சிகளுக்கு ஒப்பானதே ரிசாதினதும் ஹக்கீமினதும் கட்சிகளாகும்.
இந்த வகையில் அரசுடன் இல்லாத முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடும்படியும் அவர்களுக்கே வாக்களிக்கும்படியும் மக்களை கோருவதே சுயமான சிந்தனையின்படி எடுக்கப்படும் முடிவாகும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment