கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். 
நுங்கம்பாக்கம் புதிய தெருவைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் சாமுவேல் (26). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் சாமுவேலுக்கும், அந்த மாணவிக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அப்போது சாமுவேல், அந்த மாணவியை அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தை காட்டி மிரட்டியுள்ளார்.

மேலும் தனக்கு பணம் தந்தால்தான் அந்த புகைப்படத்தை திருப்பி தருவேன் என்றும், இல்லையென்றால் இணையத்தளத்தில் வெளியீடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி, நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சாமுவேலை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :