அப்பிள்வத்தைப்பக்கம் இராணுவத்தை அனுப்ப வேண்டாம் -நீதிமன்றம்

கர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அப்பிள்வத்தை தோட்ட அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் பாதிக்கப்படவுள்ள குடியிருப்பாளர்களுக்கு வீடமைப்புத்திட்டங்களில் புதிய வீடுகள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை நேற்று யுயர் நீதிமன்றில் தனது முன்மொழிவுகளை முன் வைத்தது.

கொழும்பு யுயர் நீதிமன்றில் அப்பிள்வத்தையைச் சேர்ந்த 25 குடியிருப்பாளர்கள் தமது அடிப்படை உரிமைகள் தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கண்ட முன் மொழிவுகளை முன்வைத்தது.

குறிப்பிட்ட குடியிருப்பாளர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் என்போருக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். அப்பிள்வத்தை வீடுகள் தங்களுக்குச் சொந்தமானதெனவும் அந்த வீடுகளில் வாழ்வதற்கு தாம் உரிமையுடையவர்களெனவும் நீதிமன்றம் பிரகடனம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்திருந்தனர். 

அத்தோடு தாம் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டால் புதிய வீடுகள் வழங்கப்படும் வரை அப்பிள்வத்தைக்கு அண்மையில் மாற்றீடாக தற்காலிக வீடுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தனர்.

நேற்றைய மனு மீதான விசாரணையின்போது நகர அபிவிருத்தி அதிகார சபை பின்வரும் முன்மொழிவுகளையும் முன் வைத்தது. 

அப்பிள்வத்தையில் வீடமைப்புத்திட்டம் நிர்மாணிக்கப்படுவதற்கு 2 வருட கால அவகாசம் தேவை. இரண்டு வருட காலத்துக்கு குடியிருப்பாளர்கள் வாடகை வீட்டில் தங்கியிருக்க மாதம் 10 ஆயிரம் ரூபா வீதம் வாடகை வழங்கப்படும் அல்லது தெமட்டகொடையில் காணியும் தற்காலிகமாக வீடும் அமைத்துக் கொள்ள குடியிருப்பாளர்களுக்கு தலா ஒரு குடும்பத்துக்கு தலா 75 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்படும். அல்லது தொட்டலங்கையில் தற்காலிக வீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்களின் சட்டத்தரணி அப்பிள்வத்தைக்கு இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்படுவதால் அவர்கள் திடீரென தங்கள் வீடுகள் அப்புறப்படுத்தி விடுவார்கள் என்றும் குடியிருப்பாளர்கள் பீதியில் இருப்பதாக தெரிவித்தார்.

மனுவினை விசாரணை செய்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இராணுவ வீரர்கள் அனுப்பப்படுவதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கினார். மனு மீதான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.vv
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :