லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், நின்றிருந்த எதியோபிய ஏர்லைன்ஸ் விமானம் தீ பிடித்ததால், அங்கு விமான போக்குவரத்து, சில மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில், தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன.
நேற்று, இந்த விமான நிலையத்தில் நின்றிருந்த எதியோபிய நாட்டு ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீரென தீ பிடித்தது.
உடனடியாக, விமானத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
இதனால், சில மணி நேரங்கள், இந்த விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
0 comments :
Post a Comment