காதல் படத்தில் அறிமுகமான சந்தியா நாயகி ஏன் ஓடினார்


காதல் படத்தில் அறிமுகமான சந்தியா இப்போது வரை கிளாமர் விசயத்தில் அடக்கியே வாசித்து வருகிறார். தன்னை சில கமர்சியல் டைரக்டர்கள் கிளாமராக நடிக்க வற்புறுத்தியதால்தான் கோலிவுட் வேண்டாமென்று மலையாளத்துக்கு எஸ்கேப் ஆனார்.

இந்த நிலையில், தற்போது யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தபடி மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார் சந்தியா.

இந்நிலையில், மாயை என்ற படத்தில் நடித்த கதாநாயகியின் நடிப்பு எடுபடவில்லை என்று பின்னர் சந்தியாவை அப்படத்துக்கு புக் பண்ணி ரீ-ஷூட் பண்ண திட்டமிட்டார்கள். ஆனால், படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற சந்தியா, அங்கே தனக்கு படுகவர்ச்சியான காஸ்டியூம்கள் தரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

நான் ஒன்றும் அயிட்டம் நடிகை இல்லை. குடும்ப நடிகை. என்னைப்போயி இந்த மாதிரி நடிக்கச்சொல்வதா என்று கொடி பிடித்தவர், இதுபோன்ற உடையணிந்து என்னால் நடிக்கவே முடியாது என்று அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டாராம்.

இதனால் மாயை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.மேலும், அட்வான்ஸ் வாங்கி விட்டு தங்கள் படத்தில் நடிக்க சந்தியா மறுத்ததால் இந்த பிரச்னையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு செல்கிறார்களாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :