அரசியலை தீர்மானிப்பது ஹக்கிமோ சம்பந்தனோ அல்ல எமது மகா சங்கத்தினர்-சம்பிக்க

ரசியல் வழியைத் தீர்மானிப்பது எமது மகா சங்கத்தினரே அன்றி ஹக்கிமோ சம்பந்தனோ அல்ல என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

மாகாண சபை முறையை ஒழிக்கக் கோரி தேசிய ஐக்கிய அமைப்பு மஹரகமை நகரில் நடத்திய மகாநாட்டில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

27 பௌத்த அமைப்புக்கள் இணைந்து நடாத்திய இந்த மகாநாட்டில் பெருந்தொகையான பௌத்த பிக்குகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கூறியதாவது, தமிழ் முஸ்லிம் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வரலாம் என்ற விளையாட்டு 2005 இல் நிறுத்தப்பட்டது. இதன்பின் இந்நாட்டில் அரசியல் போக்கினைத் தீர்மானிப்பது மகா சங்கத்தினரே ஹக்கீமோ சம்பந்தனோ இல்லை.
இந்த நாட்டின் சகல விதமான சுதந்திரத்தையும் இல்லாமல் செய்தே ஜனாதிபதி ஜயவர்தன இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டன.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் நிஜ பூமி என அவர் ஏற்றுக் கொண்டார். நாட்டின் ஒன்றையாட்சித் தலைமையை மாசுபடுத்தினார். அறுபதாயிரம் பேரைப் படுகொலை செய்து மாகாண சபை முறையைக் கொண்டு வந்தார். இதனைப் பாதுகாக்கும் சகலரும் இந்த நாட்டின் வரலாற்றுத் துரோகிகள் எனக் கூற நாம் தயங்க மாட்டோம்.

இனவாத தீவிரவாத ஒருவர் முதலமைச்சரானால் மாகாண சபையின் ஆபத்து விளங்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கின்றது. இந்த தீவிரவாத சக்திகள் வடக்கில் கதவிக்க வர முயற்சிப்பது அங்கு வாழும் சிங்கள முஸ்லிம்களை விரட்டிய பின்பே. வயோதிப தீவிரவாத சம்பந்தன் என்ற அரசியல்வாதி மாறவில்லை. இந்திய, அமெரிக்க உதவியுடன் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அவர் மட்டக்களப்பில் கூறியுள்ளார். அப்படி முடியாவிட்டால் பாகிஸ்தானில் ஜின்னா செய்தது போன்று நேரடியாக ஈழத்தை அமைப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் 60 வீதமானோர் தெற்கிலே வாழ்கின்றார்கள். வடக்குக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? அவர்களுக்கு பாதுகாப்புப் பிரச்சினை இல்லை.

வடக்கில் இனவாதத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவரிடம் நாம் கேட்பது ஐ.தே.க கொண்டு வந்த இந்த மாகாண சபை முறையினைத் திருத்தும் பொறுப்பு உங்களுக்கிருக்கின்றது என்பதாகும். அன்று சந்திரிக்கா, ரணில் கொண்டு வந்த சமாதானத் திட்டம் தோல்வி கண்டது. அவர்களிருவருக்கும் இந்த நாட்டில் தேசிய சக்திகளுக்கு செவிமடுக்க முடியும்.

ஹக்கீம் அவர்களுக்கு நாம் ஒன்றைக் கூற வேண்டும். 93 முஸ்லிம் படை வீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்ததனை நாம் மதிக்கின்றோம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் பெரும் உயர்த் தியாகம் செய்யவில்லை. வடக்கில் முஸ்லிம்களை விரட்டும் போது ஹக்கீம்கள் எங்கே இருந்தார்? அவர் பிரபாகரனின் மடியில் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார். நாம் அன்று மனிராசகுளம் சென்று முஸ்லிம்களது உரிமையை உறுதிப்படுத்தினோம்.

ஹக்கீம் அவர்களுக்கு ஒன்றில் காரியப்பர்கள் சென்ற வழியில் சென்ற சம்பந்தன்களுடன் பயணிக்கலாம். இன்றேல் டி.எஸ். சேனாநாயக்க மற்றும் பண்டார நாயக்காக்கள் சென்ற வழியில் சென்று தேசிய கொடியுடனான வழியில் செல்லலாம். எந்த வழியிலும் உங்களை எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம்.-நவமணி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :