இளவரசன் சாவுக்கு காரணமானவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினி

சென்னை ஐகோர்ட்டில் இளவரசனுக்காக வாதாடியவர் வக்கீல் ரஜினிகாந்த் ஆவார். அவர் இன்று தர்மபுரி யில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர், ’’இளவரசன் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்து இருந்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள்.

 அவர் தற்கொலை செய்து கொண்டதாக வைத்துக் கொண்டாலும் அவரிடம் இருந்து திவ்யாவை பிரித்து இளவரசனின் சாவுக்கு காரணமாக பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் மற்றும் இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளவரசனின் பிணத்தை நாங்கள் அறிவிக்கும் டாக்டர்கள் முன்னிலையில் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் இன்று மூத்த வக்கீல் பிரசாத் மனு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை பெற்று இளவரசனின் பிரேதம் மறு பரிசோதனை செய்யப்படும்’’என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :