தாதி குளிக்கும்போது படம்பிடித்தவர் பணிநிறுத்தம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியொருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது தனது கையடக்கதொலைபேசியின் ஊடாக படம்பிடித்த வைத்தியசாலை ஊழியர் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையிலுள்ள தாதி ஓய்வறையில் குறித்த தாதி குளித்துக்கொண்டிருந்தபோது அறையிலுள்ள உயரமான யன்னல் ஓட்டையில் தனது கையடக்க தொலைப்பேசியை பயன்படுத்தி படம்பிடித்த சுகாதாரப்பிரிவு உதவியாளரான
பொலநறுவையைச்சேர்ந்த ஜோசப் யூப் ரொசான் என்பவரே இவ்வாறு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபரை மாளிகாகந்த மேலதிக நீதவான் ரஷந்த கொடவெல முன்னிலையில் கடந்த 10 ஆம் திகதி புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரவு கடமையிலிருந்த தாதி கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணியளவில் தாதி ஓய்வறையில் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தஅறையிலுள்ள உயரமான யன்னலின் ஊடாக கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி யாரோ தான் குளித்துக்கொண்டிருப்பதனை படம் பிடிப்பதை அல்லது வீடியோ ஒளிப்பதிவு செய்வதனை அவதானித்துள்ளார்.
கூச்சல் குழப்பமிடாத தாதி, திடீரென பாய்ந்து கையடக்க தொலைபேசியையை அபகரித்துவிட்டார்.

இதனையடுத்து அதுதொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் குறித்த கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் இந்நிலையிலேயே அவர் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :