ஆளுந்தரப்பு உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்திக்கிறார்

கிழக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (13 ) கண்டியில் அவசரமாக சந்தித்துப் பேசுகிறார். 

கிழக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரம் தொடர்பிலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநர், தங்கள் அதிகாரங்களில் தலையிடுவது மற்றும் தங்களது திட்டங்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போது ஆளுந்தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டமூல பிரேரணை கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்படும்போது அதனை ஆதரிப்பதில்லை என்று ஆளுந்தரப்பு உறுப்பினர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி இவர்களை வலியுறுத்தவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கிழக்கு மாகாண சபையில் விரைவில் கொண்டு வரப்படவுள்ள 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மேலதிக திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்ற பிரேரணை தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :