ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் பிரசன்னமாய் இருந்துள்ளனர்.
சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்து வைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
புpரிக்கப்படாத, ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சாத்தியப்படக் கூடியதுமான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்கு கூட்டமைப்பு தயாராக இருப்பதாக சம்பந்தன், ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.
இது தவிர, காணி விடயங்கள், மக்களை அவர்களின் ஆரம்ப இடங்களிலேயே மீளக்குடியேற்றுதல், இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல், இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே முடக்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவது பற்றியும் இதன்போது ஆராயப்பட்டதாகவும் இந்த சந்திப்பு சினேகபூர்வமாக அமைந்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment