கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் சாய்ந்தமருதில்.

கிழக்கு மாகாண சபையின் பாலர் பாடசாலை பணியகத்தின் அனுசரணையுடன் கொம்டெக் உயர் கல்வி நிறுவனம் நடத்தவுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி டிப்ளோமா பாட நெறி இன்று சனிக்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பண வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், மாகாண பாடசாலை பணியகத்தின் பணிப்பாளர் பொன்.செல்வநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.பறக்கத்துல்லா, உமர் அலி, எம்.எம்.முஸ்தபா, எம்.சாலிதீன் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இவர்களுடன் பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், பிரமுகர்கள் மற்றும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த டிப்ளோமா பாட நெறியை முற்றிலும் இலவசமாக பயில்வதற்காக பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் பாலர் பாடசாலை பணியகத்தின் அங்கீகாரத்துடன் கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தினால் நடத்தப்படவுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி டிப்ளோமா பாட நெறி ஒரு வருட கால பாடத்திட்டத்தை கொண்டதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :