அட்டாளைச்சேனை 08ம் பிரிவின் கிராம அபிவிருத்திச்சங்கம் புனரமைப்பு


ஹாதி
நீண்ட காலமாக செயலிழந்து கிடந்த அட்டாளைச்சேனை 08ம் பிரிவின் கிராம அபிவிருத்திச்சங்கம் புனரமைப்பு

கடந்த ஆறு வருடங்களாக கலைக்கப்பட்டுக் கிடந்த கோணாவத்தை கிராம அபிவிருத்தி சங்கம் இன்று அட்டாளைச்சேனை 08ம் பிரிவின் கிராம சேவையாளர் 

தலைமையில் அக்-அந்நூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டதோடு; கிராம அபிவிருத்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பீ.உவைஸ் கூட்டத்தனை ஆரம்பித்து வைத்து கடந்த காலங்களில் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கியதோடு, கிராம அபிவிருத்திச் சங்கம் கடந்தகாலங்களில் நிருவாகத் தெரிவு இடம்பெறாமைக்கான காரணங்களை விளக்கி கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்து கூட்டத்தினை கிராம உத்தியோகத்தர் வழிநடாத்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் உரையுடன் 2013ம்வருடத்திற்கான நிருவாகத் தெரிவு இடம்பெற்றது.
நடப்பாண்டிற்கான நிருவாக உறுப்பினர்களாக

தலைவர் : ஏ.எல்.றியாஸ்
செயலாளர் : எஸ்.ஏ.பாரீஸ்
பொருளாளர் : ஏ.சி.றிஸாத்
உபதலைவர் : பீ.எம் .பர்ஹாத்
உபசெயலாளர் : கே.எல். நிசாமுத்தின்
கணக்குப் பரிசோதகர்: ஏ.எல் நியாஸ்
தெரிவு செய்யப்பட்டதோடு நிருவாக சபை உறுப்பினர்களாக 11பேரும் தெரிவு செய்யப்பட்டு கூட்டம் சிறப்புற நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :