ரமழானுக்கு தயாராகும் புனித மக்கா மற்றும் மதீனா

சொற்பொழிவுகளில், புனித குர்ஆன் விநியோகம், அதிகமான சுத்தம் செய்யும் ஊழியர்கள் மற்றும் கடுமையான பாதுகாப்பு என்பன இந்த வருட ரமழான் மாதத்தின் போது புனித மக்கா மற்றும் மதீனாவில் அமைந்துள்ள இரு புனித பள்ளிவாயல்களில் கிடைக்கும் சேவைகள் சில.

இந்த சேவைக்கான திட்டங்கள் யாவும் கடந்த ஜூன் மாதம் 24 திகதி ஆரம்பமாகிவிட்டதாக இரண்டு புனித பள்ளிவாயல்களின் சேவைகளுக்கு பொறுப்பான நிர்வாகத்தின் துணைத் தலைவர் முகம்மத் பின் நாசிர் அல் குசையும் அரப் நியூசிக்கு தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் காலத்தில் இரு புனித பள்ளிவாயல்களில் உம்ராஹ் கடமை, இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக 100 மார்க்க அறிஞ்சர்கள் (முப்திகள்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர். இந்த போதனைகள் பஜ்ர் (அதிகாலை) மற்றும் மக்ரிப் (மாலை) தொழுகைகளுக்கு பிறகு நடைபெறும்.

இரு புனித பள்ளிவாயல்களிலும் உள்ள பல்வேறு இடங்களில் யாத்ரீகர்கள் மற்றும் வருகையாளர்கள் இஸ்லாம் பற்றி கேள்விகள் கேட்டு அறிந்துகொள்ள 150 தொலைபேசி இணைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய கடமைகளின் போது ஏற்படும் பிழைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்படும்.

சம்சம் தண்ணீரை பெறுவதற்கு 25,000 க்கும் மேற்பட்ட நிரப்பிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிரப்பிகளில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் கப்கள் வைக்கப்படும்.

முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் புனித கஹ்பாவை தவாபு செய்வதற்கும், சயி செய்வதற்கும் (சபா, மர்வாகிடையில் ஒடுதல்) 10,000 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புனித மக்கா பள்ளிவாயலின் வெளிப்பகுதியில் பல்வேறு இடங்களிலும், சபா வாயிற் கதவின் முதல் மாடியிலும் கிடைக்கும். தானியங்கி சக்கர நாற்காலிகள் (Automatic wheelchairs) மூலம் சயி செய்வதற்கு (சபா, மர்வாகிடையில் ஓடுதல்) சவூதி ரியால் 50 செலவாகும்.

கள்வர்களின் திருவிளையாடல்களை தடுப்பதற்கு நான்கு மாடிகளிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவர். இந்த அதிகாரிகள் புனித பள்ளிவாயல் முழுவதையும் கணணி கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவதோடு, புனித பள்ளிவாயலின் 139 வாயிற் கதவுகளில் ஏற்படும் சன நெரிசலையும் கட்டுப்படுத்துவார்கள்.

உருது, பிரஞ்சு, பகஷா (இந்தோனேசிய மொழி), இஸ்பானிஸ், போஸ்னியன் மற்றும் துருக்கி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புனித அல்-குர்ஆனின் ஒரு மில்லியன் பிரதிகள் யாத்திரிகர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :