மழையின் குறுக்கீட்டுடன் இலங்கை வெற்றி: இன்று இந்தியாவுடன் பலப் பரீட்சை

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்பாடி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 

முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இரு நாட்களாக ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

நேற்று முந்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று போட்டி தொடரப்பட்டது. இதன்போதும் மழை குறுக்கிட்டமையினால் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு 230 ஓட்டங்கள் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டது.

எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுக்ளை இழந்து 190 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று (09) மோதவுள்ளன.

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :