பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

னைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டாரவை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சமூகமளித்திருந்த வேளையிலேயே தடுப்புக் காவலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சஞ்ஜீவ பண்டார கோட்டை நீதவானால் எதிர்வரும் காலங்களில் எந்த வித ஆர்ப்பாட்டங்களுக்கும் கலந்து கொள்ளக்கூடாது என எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். 

மேலும் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் இவர் கலந்து கொண்டமையால் நீதிமன்ற உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சஞ்ஜீவ பண்டார பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :