சாய்ந்தமருது முஹம்மதட் ஹனீஸ்2011 இல் எகிப்த்தில் ஆரம்பித்த புரட்சின் காரணமாக முஸ்லிம் சகோதர இயக்கத்தை ஏகமனதாக தெரிவு செய்து முர்சியை அதிபராக எகிப்திய மக்கள் தெரிவு செய்தார்கள். கடந்தவாரம் நடந்த சதி புரட்சியினால் அதிபர் முர்சி பதவி பரிக்கப்பட்டார்.
எட்டு தசாப்தத்திற்கு மேலாக அடிமை பட்டு இருந்த எகிப்து மக்களுக்கு ஏன் அதிபர் முர்சிக்கு குறைந்தது இரண்டு வருடங்களாவது அவகாசம் கொடுக்கவில்லை?
அதிபர் முர்சியை பதவி
இறக்க இலட்சக்கணக்கானோர் போராடினார்கள் அதிபர் முர்சிக்கு எதிராக வாக்களித்த அந்த 48% மக்களையும் ஒருமித்து போராட்ட களத்திற்கு கொண்டுவந்தால் அது ஒரு பெரிய எண்ணிக்கையாகத்தான் இருக்கும் அதற்காக பேரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி நீக்கலாமா, இப்படியான அதிசயங்கள் மத்திய கிழக்கு நாடுகளில்தான் நடக்கும்.
முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி தேர்தலில் வெற்ற வெற்றிகளின் புள்ளி விபரம்
2011 மார்ச் அரசியலமைப்பு வாக்கெடுப்பு
ஆதரித்தவர்கள் 77%
எதிரானவர்கள் 23%
மக்கள் சட்டசபை தேர்தல்
முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி 46%
இஸ்லாமிஸ்ட் ப்லோக் கட்சி 25%
ஷுர சபை தேர்தல்
முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி 58%
இஸ்லாமிஸ்ட் ப்லோக் கட்சி 25%
ஜனாதிபதி தேர்தல்
முஹம்மத் முர்சி 52%
அஹ்மத் சபிக் 48%
2012 டிசம்பர் புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பு
ஆதரித்தவர்கள் 64%
எதிரானவர்கள் 36%
போராடியவர்கள் யார்? யாகுதிகளும் நசரானிகளும் இந்த போராட்டத்தில் முழுமையாக பங்கேடுத்தார்கள், நாட்டின் ஒவ்வொரு மூலைலுள்ள யாகுதிகளும் நசரானிகளும் இப் போராட்ட காலத்திற்கு கொண்டுவரப் பட்டார்கள், இவர்கள் அதிபர் முர்சியை எதிர்ப்பதற்கு காரணம் இருக்கிறது அதுதான் ஒரு இஸ்லாமிய ஆட்சி வலுப்பெரபோகின்றது, இதே காரணம்தான் உலக இஸ்லாமிய விரோத நாடுகள் வெறுப்பதற்கு கரணம்நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையிலிருந்து அமெரிக்க இந்த சதி பின்னணியில் இருந்தது உறுதியாகின்றது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ஈ ரைஸ் ஒரு மணி நேர இராணுவம் சதிக்கு முன் அதிபர் முர்சியை தொடர்பு கொண்டு இராணுவம் பதவியிலிருந்து நீக்க முன் அதிபர் முர்சியை அலுவலகத்தில் இருந்து வெளியறிவிடவும் கூறினார் என்று ஒரு அறிக்கை கூறுகிறது,
அரபு உலக வெளியுறவு மந்திரி ஒருவர் அமெரிக்காவின் தூதுவர் கரியளத்திளிருந்து அதிபர் முர்சியை தொடர்பு கொண்டு அதிபர் முர்சியினது அமைச்சரவை மாற்றங்களை செய்யவும் உதவி அதிபரையும், அதிகாரமுள்ள அளுனர்களை நியமிக்க ஒரு இறுதி வாய்ப்பு அமெரிக்காவினால் கொடுக்கப்பட்டது எனவும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.
மேலும் அதிபர் முர்ச்யின் உயர்மட்ட வெளியுறவு கொள்கை ஆலோசகர், இஸாம் அல் ஹட்டாத், எகிப்து அமெரிக்க தூதுவர் ஆனி டபிள்யூ பேட்டர்சன் அழைத்து அதிபர் முர்சி அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியவில்லை என்று கூறினார்,
நாம் சிந்திக்கவேண்டியது, நமது தலைவர்களை போல அதிகாரத்திற்கும், பணத்திற்கும் ஆசை பட்டிருந்தால் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்தது இருக்கலாம், அல்லாஹ் ஒருவனுக்கே பயந்த அவரால் அமெரிக்காவிற்கு பயர முடியவில்லை.
அதிபரின் ஆலோசகர் இஸாம் அல் ஹட்டாத் சற்று நேரத்திற்கு பின் எகிப்து அமெரிக்க தூதுவர் ஆனி டபிள்யூ பேட்டர்சன் இருந்து ஒரு குறுந்தகவல் ஓன்று அவரின் கைத்தொலைபேசிக்கு அதாவது "எங்களுடைய அம்மா சொன்னார் எங்களுடைய விளையாட்டுகளை இன்னும் ஒரு மணித்தியலங்களுக்குள் நிறுத்தபோவதாக" அம்மா என்று அவர் குறிப்பிட்டது அமெரிக்காவை. நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது
மேலும் அவ்வறிக்கையில் " எகிப்தியர்கள் பழிச்சொல்லாக சொல்லும் மேற்கத்திய அதிகாரம் என்றும் சொல்லுவார்கள் பில்லியன் டொலர் பெறுமதியான எகிப்திய இராணுவ உதவியுடன் நடந்து முடிந்தது" என்று கூறுகிறது.
இந்த அறிக்கையின் மூலம் நாம் நேரடியாக புரிந்து கொள்ளலாம் அமெரிக்காவின் டொலர் பெறுமதிக்கு எகிப்தின் இராணுவ அமைச்சர் ஜெனரல் அப்துல் பாட்டாஹ் அல் சிசி விலை போய்விட்டார் என்பது.
அந்த ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் கிப்தின் இராணுவ அமைச்சர் ஜெனரல் அப்துல் பாட்டாஹ் அல் சிசி ஊடகத்தில் "அதிபர் முற்சியை இராணுவம் பதவிலிருந்து நீக்குவதாகவும் அவர் மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டார்" என்று கூறினார்
எந்த ஆசையை பூர்த்தி செய்யவில்லை, அவர் ஆட்சிக்கு வந்தவுடன் இரவு களியாட்ட விடுதிகளை மூடினார், இஸ்லாத்திற்கு முரணான பல விடயங்களை ஒழித்தார்,
வினோதம் எதுவென்றால் படைத்தளபதியாக இருந்த சிசி அவரை சுப்ரிம் படைத்தளபதியாக பதவி உயர்த்தி அவரை அதிகாரமிக்க பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி உயர்த்தினார், முஸ்லிம் சகோதருத்துவ அமைப்பை சார்ந்த உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கூறுகிறார் அதிபர் முர்சி அவர்கள் பாட்டாஹ் சிசி அவர்களை மிகவும் அழமாக நம்பினார், அட்லி மன்சூர் என்பவரின் மக்கள் மத்தியில் பிரபல்யம் எந்த அளவு தொடர்பாக அல் ஜசிரா கூறுகையில் "தற்போது போராட்டம் நடக்கும் இடத்திற்கு அட்லி மன்சூர் நடந்து போனால் எந்த ஆபத்து இல்லாமல் அவர் திரும்பி வரலாம் ஏனென்றால் மக்களுக்கு அவரை தெரியாது"
தற்போதைய எகிப்திய அதிபர் அட்லி மன்சூர் அதிபராக முன்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அதிபர் முர்ச்யினால் உச்ச அரசியலமைப்பு நீதிமன்றம் தலைவராக நியமிக்கப்பட்டார், இப்படி அதிபர் முர்சி அவர்களின் அதி நம்பிக்கையை வென்ற இவர்கள் எப்படி குறிகிய காலப்பகுதிக்குள் அவருக்கு எதிரிகளாக மாறினார்கள், இது இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டு செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது புரியவருகின்றது, இத் திட்டமிடலுக்கு இன்னொரு சான்றாக முஹம்மட் எல்பரடேய் (ElBaradei) என்பவர் உதவி அதிபராக நியமித்து இருப்பது.
வாஷிங்டனில் கடந்த டிசம்பரில் அதிபரின் ஆலோசகர் இஸாம் அல் ஹட்டாத் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அவர்களை சந்தித்த போது ஒபாமா எதிர்தரப்பு கட்சிகளையும் நிறுவகத்திற்கு உள்வங்குமாறு வாதாடினார் என்றும்
மாநில செயலாளர் ஜோன் கெர்ரி எகிப்தின் பிரதம மந்திரியாக முன்னாள் சர்வதேச அணுசக்தி தலைவர் முகமை மொஹமட் ElBaradei நியமிக்கவும் என்று ஆலோசனை வழங்கினார் ஆனால் அது அதிபர் முர்சியினால் நிராகரிக்கப்பட்டது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறியது.
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு இஸ்லாமிய ஆட்சி வருவதை எந்த ஒரு நாடும் விரும்பவில்லை என்பதும் ஏன் மத்திய வளைகுடா முஸ்லிம் நாடுகளும் அதற்க்கு உடந்தை என்பதும் நமக்கு விளங்குகின்றது, ஆனால் ஒன்றும் மட்டும் உண்மை "இஸ்லாம் மட்டும்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்ய போகின்றது, அது ஆட்சி செய்ய துவங்கியும் விட்டது"
0 comments :
Post a Comment