கூட்டத்தைக் குழப்பிய மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர்

ட்டக்களப்பில் தேசிய சமாதான பேரவை இன்று ஏற்பாடு செய்திருந்த கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணி பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செலமர்வின்போது மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதியான அம்பிட்டிய சமரத்ன தேரர் கூட்டத்தை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து கூட்டம் இடம்பெற்ற மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் நேற்று பதற்ற நிலை தோன்றியிருந்தது. இங்கு கைகலப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த மூவினங்களையும் சேர்ந்தவர்கள், சிவில் சமூகத்தினர்,மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உட்படலான கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது அங்கு திடீரென அந்த செயலமர்வுக்கு வந்த மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்றவேண்டுமென கேட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இருப்பினும் தலைப்பை விட்டு வேறு விடயங்களை அங்கு கூற முயற்சித்த போது, அதனை ஏற்பாட்டாளர்கள் விகாராதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதன்போதே அவர் ஏற்பட்டாளர்கள் மீது தாக்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :