ஜீசஸ் ஆண் குறியல்ல என்று போஸ்டர் காட்டிய 14வயது பெண்ணால் சர்ச்சை!

டெக்சாஸ் மாகாண கருக்கலைப்பு சட்டத்தை எதிர்த்து 14வயது பெண் போஸ்டர் ஒன்றை காண்பித்து எதிர்ப்பு தெரிவித்ததற்கு கடும் கண்டனம் அமெரிக்கா முழுதும் எழுந்துள்ளது.

அந்தப் போஸ்டைல் அந்தப் பெண் கூறிய இந்த வாசகம்தான் இந்த கொதிப்புக்குக் காரணம்:

"ஜீசஸ் ஆண் குறியல்ல; எனவே அவரை என் உறுப்பிலிருந்து வெளியேற்றவும்! என்று அந்த போஸ்டர் வாசகம் இருந்ததையடுத்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன.

இண்டெர்னெட், சமூக வலைத்தளம், டுவிட்டர் என்று அந்த 14 வயது பெண் மீது வசைகள் குவிந்து வருகிறது.

ஆனால் பெண்ணின் தந்தை இது பற்றி பெருமையாக பேசியுள்ளார், "என் மகள் அவரே இந்த வாசகங்களை உருவாக்கினார். 

போஸ்டரை பிடித்திருப்பது என் மகளின் நண்பி´என்றார் அவர். மேலும் தந்தையான பில்லி கெய்ன் கார்டியன் இதழில் இதுபற்றி கூறுகையில், மனித உரிமையை நிலைநாட்ட தனது பெண் தைரியமாக குரல் கொடுத்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

ஆனால் இந்தப் பெண்ணிற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து ஆதரவும் வந்துள்ளது. முன்னணி ஆன் லைன் மீடியாவான ஜெசெபெல் இந்தப் பெண் தங்கள் மீடியாவுக்கு வந்து தலைப்புச் செய்திகளை எழுதிக் கொடுக்கவேண்டும் என்று வரவேற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :