கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சிவில் சமூக அமைப்பினருக்கும் இடையே சந்திப்பு

டமாகாண சபைக்கான கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருக்கும் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையே நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று நடந்துள்ளது.

இச்சந்திப்பில் சீ.வி.விக்கினேஸ்வரனுடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொது செயலாளர் மாவை சேனாதிராசா சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்டிருந்தனர்.

13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாண சபையில் ஒன்றுமில்லை என்ற பிரச்சாரங்கள் மக்களிடையே முன்னெடுக்கப்படுவதால் மக்களிடம் வாக்கு கோரி செல்வதில் உள்ள சிக்கலை கூட்டமைப்பு தரப்பு பிரஸ்தாபித்துள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அதில் கொண்டிருக்க வேண்டியவை மற்றும் அண்மையில் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

முரண்பாடுகளை பரஸ்பரம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என சீ.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்ததாக தெரியவருகின்றது. கூட்டமைப்பின் மற்றொரு பாராளுமன்ற அங்கத்தவரது யாழ்.வதிவிடத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :