2021ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டம்.


2021ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் எண்டீவர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு தரை இறங்கிய விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

தற்போது எண்டீவர் விண்கலத்தில் ஆய்வுகூடம் மட்டுமே உள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் கருவிகள் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு,தட்ப வெப்பநிலை உள்ளிட்டவைகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில்2033–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் நாசா மையம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளது.

ஆனால், நாசாவின் இந்த தீவிர முயற்சியை முறியடிக்கும் வகையில் இங்கிலாந்து வருகிற2021–ம் ஆண்டிலேயே செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புகிறது. அதற்காக 3 பேர் குழு பயணம் செய்யும் விண்கலத்தை வடிவமைத்து வருகிறது.

லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இந்த குழுவின் தலைவர் பேராசிரியர் டாம் பைக் கூறும்போது, செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்புவதுதான் அடுத்த மிகப்பெரிய இலக்காக கருதுகிறோம்.

அதன் மூலம் சந்திரனின் தரை இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங் புஷ் ஆல்ட்ரினின் சாதனையை21–ம் நூற்றாண்டில் நிகழ்த்த போகிறோம்.

மனிதர்களை அனுப்பும் அதே நேரத்தில் மற்றொரு ராக்கெட்டில் செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதிக்கு´ரோபோ´களை அனுப்ப இருக்கிறோம். அவை அங்குள்ள ஐஸ் படிவங்களை வெட்டியெடுத்து ஆய்வு மேற்கொள்ளும்.

அதே நேரத்தில் அங்கு செல்லும் 3 பேர் கொண்ட குழு 9 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு திரும்புவார்கள். புவியீர்ப்பு சக்தி கிடைக்காத காரணத்தால் அவர்களின் உடல் எடை மற்றும் தசை மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, அவர்களின் உடல் நிலை பாதிக்காத வகையில் பயணம் செய்யும் விண்கலம் அதிநவீன முறையில் விசேஷமாக வடிவமைக்கப்பட உள்ளது என்றும் விஞ்ஞானி பைக் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :