வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்திரவின் பிணையாளர் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்திர குணவர்தனவின் பிணையாளர் கடுவெல நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

பிணையாளரான சஞ்ஜீவ கரன்னாகொடவே இவ்வாறு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

சஞ்ஜீவ கரன்னாகொட என்பவர் மாலபே ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவனான நிபுண ராமநாயக்கவின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சந்தேகநபரான ரவீந்திர குணவர்தனவின் பிணையாளராவார்.

இந்நிலையில், ரவீந்திர குணவர்தவிற்கு நேற்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற்ற நீதவான் வசந்த ஜினதாஸ நவம்பர் 29 ஆம் திகதிக்கு முன்னர் சந்தேகநபரான் ரவீந்திர குணவர்தனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவிடின் பிணையை அரசுடமையாக்க முடியாமைக்கான காரணத்தை நீதிமன்றுக்கு தெரிவிக்கவேண்டிவரும் என்று நீதவான் பிணையாளரை எச்சரித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :