இலங்கை இராணுவத்திடமிருந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்தும் இந்திய மத்திய அரசாங்கம் பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது தொடர்பில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயலாளர் பியசிறி விஜயநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்த பொருமான் பிறந்த பூமியான புத்தகாயவில் உள்ள மகாபோதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலானது உலகத்தில் உள்ள பௌத்தர்களுக்கே கவலையளிக்கும் செயலாகவுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களின் பாரம்பரிய உரிமைச் சின்னமாகும்.
இச் செயலை தேசிய சுதந்திர முன்னணி மிகவும் வன்னையாக கண்டிக்கின்றது. இந்திய மத்திய அரசாங்கம் இதற்கு காரணமாக இருந்தவர்களை உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் இன மற்றும் மத ரீதியான பல பிரிவினைவாதிகள் உள்ளனர். அதனைவிட அங்கு பல பயங்கரவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன. இதனை ஒழிக்க இந்தியா முற்படாவிட்டால் தெற்காசியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும்.
இந்நிலையில் இந்தியா இலங்கைக்கு ஆலோசனைகளை வழங்குவது வேடிக்கையான செயலாகும். பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது குறித்து இலங்கை இராணுவத்திடம் இருந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்தும் இந்தியா பாடம் கற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment