புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி

புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகொன்று கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளதுடன் ஒருவயதான குழந்தையொன்றின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது படகில் 97 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் 88 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.

மேலும் 8 பேரைக் காணவில்லையெனவும் அவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகானது கிறிஸ்மஸ் தீவிற்கு வடக்கே 87 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகில் இருந்தவர்கள் ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.

படகானது இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காப்பாற்றப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :